63 புலனாய்வு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு அனுமதி

224
சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி உள்ளிட்ட 63 புலனாய்வு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப ட்டபோது, இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரகசியப் பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான் சுலோச்சனா வீரசிங்க இந்த அனுமதியை அளித்துள்ளார்.
32 நிறுவனங்களிலுள்ள 63 பேரினதும் கணக்குகளை பரிசோதிக்க, அனுமதி கிடைக்கப்பெற்று ள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரா ணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கல்கிஸை பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி இந்த படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்பட்டபோது, லசந்தவை படுகொலை செய்த நபரை அடையாளம் காட்டிய சாட்சியாளர் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாமையினால் அன்று இடம்பெறவிருந்த அடையாள அணிவகுப்பு இன்றுவரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த நபர் இன்னும் சுகயீனமான நிலையிலேயே உள்ளதால் இந்த வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை என்பதோடு, சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில். வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில்  வைத்து கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்ய்யப்பட்டார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் கல்கிஸை பிரதம நீ வான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 20 படையினர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படு த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கடந்த  15ஆம் திகதி உதாலகம என்ற சாஜன்ட் மேஜர் தர இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட  இவர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது அவரின் வாக னத்தை செலுத்திய சாரதியால் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து சந்தேகநபரை மீண்டுமொருமுறை  இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.
SHARE