அட பாவமே…. மஹிந்தவுக்கா இந்த நிலை…?
உகண்டாவின் ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர்.
மக்களிடம் இருந்து அறவிடப்ப்பட்ட வரிப் பணத்தில்தான் இவர்கள் உகண்டாவுக்கு சென்றுள்ளனர் என பகிரங்கமாக தெரியவந்துள்ளது.
அதுவும் இலங்கை ரூபாய் 425000 அதாவது நான்கு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் இவர்களின் உகண்டா பயணத்திற்கான தொகையாக காட்டப்பட்டுள்ளது.
அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதிக்கா இந்த நிலைமை…? ஒரு 4 லட்சம் கூடவா இல்லை மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில்…?
நிதி மோசடி வழக்கில் அடிக்கடி விசாரணைக்கு செல்லும் மஹிந்தவின் புதல்வன் யோஷித்த இருக்கையில் மஹிந்தவுக்கா இந்த நிலமை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முணுமுணுக்கின்றனர்.
பாவம் மகிந்த வீட்டில் வங்குரோத்து…! நாட்டில் இராணுவப் பாதுகாப்பு இல்லை. ஆனால் உகண்டாவிலோ கொமோண்டோ பாதுகாப்பு…! பேசாமல் மஹிந்த ராஜபக்ஷ உகண்டாவிலேயே குடியுரிமை பெற்றுக்கொள்ளலாமே….!