65வருடங்களின் பின் நிறைவேறிய விசித்திரக் காதல்.

311

ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள்  பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர்.

இருவரும் 1940ன் கடைசிகளிலும் 1950ன் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். காதலர்களாக இருந்த போது தங்கள் திருமணம், எதிர்காலம், தங்களிற்கு பிறக்கும் குழந்தைகளிற்கு என்ன பெயர்கள் வைப்பது என்பனவற்றை எல்லாம் குறித்து கலந்துரையாடினர்.

இருவரதும் சொந்த ஊர் ஒட்டாவா. ஆனால் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோர்ஜ் கிரான்டிற்கு ஓக்வில், ஒன்ராறியோவில் வேலை கிடைக்க ஒர் ஒட்டாவாவில் தங்கிவிட்டார். இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்று திருமணமும் செய்து குடும்பஸ்தர்களாகினர்.

கடந்த மார்ச் மாதம் இருவரும் மீண்டும் இணைந்தனர். அப்போது கிரான்ட் 83 ஒட்டாவாவிற்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட ஆசையினால் ஒர்ஐ அழைத்தார். அவருக்கு வயது 82.
ஒர்ஐ இரவு உணவிற்கும் நடனத்திற்கும் அழைக்க அவரும் உடன் பட்டார். இருவரும் தற்போது துணைகளை இழந்தவர்கள்.

முந்தய நாட்களில் நடனங்களுடன் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டவர்கள்.
ஒர் ஒட்டாவாவில் உள்ள தனது வீட்டை விற்று விட்டு கிரான்ட் வசிக்கும் பேர்லிங்டனிற்கு இடம்பெயர்ந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். யூன் மாதம் 6ந்திகதி பேர்லிங்டன் படையணியில் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.

highhigh1 high3

 

SHARE