65 வயது காதலியை கொன்று புதைக்க முற்பட்ட 60 வயது காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

128

 

தனது காதலியை படுகொலை செய்து செய்து, சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மாரடைப்பினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

60 வயதான ஜோசப் மெக்கின்ன் என்ற நபரே இவ்வாறு காதலியை படுகொலை செய்து, தனது வீட்டின் பின் பகுதியில் அந்த சடலத்தை புதைக்க முயற்சித்துள்ளார்.

65 வயதான பெற்ரிசியா ரூத் டென்ட் என்ற பெண்ணே சம்பவத்தில் கொலையுண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சடலங்களும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

65 வயதான பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 60 வயதான ஆண் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

SHARE