யுக்ரேனில் கலிநோவ்கா என்னும் சிறியதொரு கிராமத்தில் வசித்து வரும் Larissa Mikhaltsova என்ற பாட்டி தனது 66ஆவது வயதில் மாடலாகி அசத்தி வருகிறார்.
இவர் 40 வருடங்களாக இசைக் கருவியை குழந்தைகளுக்கு பயிற்றுவித்து வருகின்றார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் மாடல் ஆவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டள்ளார்.
இந்நிலையில் இவர் ஊடகம் ஒன்றிற்கு தனது பேட்டியை வழங்கியுள்ளார். இதில் இவர் கூறுவதாவது,
“நாடகம் ஒன்றை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்ததை தொடர்ந்து இவை அனைத்தும் தொடங்கியது.
அவர்கள் என்னை சர்வதேச பெண்கள் தினத்துக்கான பதிப்புகாக ஃபோட்டோ ஷூட்டில் பங்கு கொள்ள அழைத்தனர்.
அதுகுறித்து யோசித்தேன் பின் கவனமாக எனது ஆடைகளை தேர்ந்தெடுத்தேன்.
மேலும் எனது அக்கார்டியன் இசைக்கருவியுடன் என்னை படம் பிடிக்க வேண்டும் என்று கூறினேன்.
ஃபோட்டோ ஷூட்டுக்கு பிறகு அவர் தனது பேரப்பிள்ளையை தயாரிப்பாளராக இருக்க கோரியுள்ளார்.
ரஷ்யாவில் முதியவர்களுக்காக இருக்கும் ஒரே முகமையை அவர் தொடர்பு கொண்டார். அதில் கலந்து கொள்ள மாஸ்கோவிற்கு சென்றார். முதலில் இது தவறாக பட்டது. சிகை அலங்காரத்துடன் ஹை ஹீல்ஸூடன் இறுக்கமான ஒரு பாவடை ஒன்றை அணிந்து சென்றேன். என்னை பார்த்து இவரை அட்டைப் படத்தில் போடுங்கள் என்றார்.
இந்த ஃபோட்டோ ஷூட்டுக்கு பிறகு அவர் ஜெர்மன் ஃபேஷன் ஷோவுக்கு அழைக்கப்பட்டார்.
மேக் அப் சிகையலங்கம் எனக்கு பழக்கமில்லை. ஆனால் மாதம் ஒரு முறை நான் இதை பொறுத்துக் கொள்ளுவேன். நடனம் மற்றும் பூனை நடை பழக வகுப்புகளுக்கு சென்று பழகி கொள்ளுவேன்.
அனைவரின் கவனமும் என மீது விழும் போது நான் ராணியை போல் உணருவேன். அது எனக்கு பிடிக்கும்” என்றார் Larissa Mikhaltsova.
சாதிப்பதற்கு அது எந்த துறையாக இருப்பினும் வயது ஒரு தடையில்லை என்று இவர் நிரூபித்து காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.