67ஆவது அகவையில் இலங்கை இராணுவம்

220

sl-army-copy

இலங்கை இராணுவம் இன்று(10) தனது 67வது நிறைவு தினத்தை கொண்டாடுகின்றது.

இந்த நிகழ்வுகள் பனாகொட இராணுவ முகாமில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.

67வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று கண்டி தலதா மாலிகையில் விசேட மத வழிபாடுகள் இடம் பெற்றுள்ளதுடன் பனாகொட ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் விஷேட பிரித் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.

அத்தோடு இந்து மத வழிபாடுகள் கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலம் வானேஸ்வரர் கோவிலிலும், இஸ்லாமிய மத வழிபாடுகள் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதிலும், கிறிஸ்தவ மத வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் இடம்பெற்றுள்ளது.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி சிலோன் ஆர்மி எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவு, 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறியதன் பின்னர் இலங்கை இராணுவம் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் தீவிரவாதத்திற்கு எதிராக 30 வருட காலமாக போராடியுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததமை இராணுவத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்

இன்று நாட்டுக்காக சுமார் 25 000 இராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE