7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி! கதறும் கணவன்கள்

251

பெங்களூருவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு கே.ஜி.ஹல்லி அருகேயுள்ள சாராய்பாளையாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் யாஸ்மின் பானு (38) என்பவரை காதலித்து திருமனம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவரின் சொத்தை அபகரிக்க ஆசைபட்ட யாஸ்மீன் இம்ரானிடம் ரொக்கமாக பல லட்ச ரூபாய் பெற்று கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இம்ரானை விட்டு பிரிந்து சென்று பல தொழிலதிபர்களை தன் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, இம்ரான் கே.ஜி.ஹல்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் மனைவி யாஸ்மீன் என்னை திருமணம் செய்து எமாற்றி விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், சில புகைப்பட ஆதாரங்களை வெளியியிட்டு விடுவேன் என என்னை மிரட்டி பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

இது தவிர, எனக்கு அடுத்ததாக, அப்சல் என்பவரை திருமணம் செய்தார். அவரிடமும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து, 3வதாக சையத் சேக் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசீப், 6வதாக சோயப் என 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு, கல்யாண ராணியாக ஏமாற்றும் எனது மனைவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, யாஸ்மின் வலையில் சிக்கிய சோயப் மற்றும் அப்சல் என்பவர்கள் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார்களை ஏற்றுக்கொண்ட பொலிசார், யாஸ்மின் மீது மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றததில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

SHARE