70 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சந்தேகநபர் பாகிஸ்தான் கராச்சி விமானநிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44 வயதான குறித்த சந்தேகநபர் தனது பயணப்பொதியில் மறைத்து வைத்தவாரே ஹெரோயினை கடத்தி வந்துள்ளதாக விமான நிலைய போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய போதை ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.