தேற்றாத்தீவில் விபத்து! ஒருவர் படுகாயம்

297

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதசாரிகள் கடவையூடாக வீதியை கடக்கமுற்பட்ட பொதுமக்களுக்கு வழிவிடுவதற்காக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் மீது பின்புறமாகவந்த டிப்பர் ரக வாகனம் மோதியுள்ளது.

இதன்போது களுவாஞ்சிகுடியை சேர்ந்த 36 வயதான க.சந்திரமோகன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் நீண்டதூரம் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

 

 

 

SHARE