750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.
இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள், கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.