78 தேர்தல் முறைப்பாடுகள்: இதுவரை 102 பேர் கைது

345
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரையில் கிடைத்திருக்கும் 78 முறைபாகளுக்கமைய 102 பேர் நேற்று வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
police

தேர்தல் செயலக முறைப்பாடு பிரிவிற்கு தேர்தல் அறிவித்த நாளில் இருந்து நேற்று வரையில் 471 முறைபாடுகள் கிடைத்துள்ளதோடு, அம்முறைப்பாடுகளில் 139 முறைப்பாடுகள் அரசாங்கத்தின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பிலாகும்.

அதிக முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் கிடைத்திருப்பதோடு, அதன் எண்ணிக்கை 70ஆகும்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 340 முறைப்பாடுகள் பெப்ரல் அமைப்பிற்கும், 462 முறைப்பாடுகள் கபே அமைப்பிற்கும், 105 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்திற்கும் கிடைத்திருப்பதாக அவ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE