78 ரன்னில் சுருட்டி டூ பிளெஸ்ஸிஸ் அணிக்கு மரண அடி கொடுத்த மார்க்ரம் படை

126

 

SA20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் அணியை வீழ்த்தியது.

The Wanderers மைதானத்தில் நடந்த போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ஜோபர்க் அணி 15.2 ஓவரில் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், அதிரடி வீரர் ஹென்றிக்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.

அதிகபட்சமாக மேட்ஸன் 32 (23) ஓட்டங்கள் எடுத்தார். பாட்ரிக் க்ரூகர் மற்றும் டேனியல் வோர்ரல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய மார்க்ரமின் சன்ரைசர்ஸ் அணி, 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தாவீத் மலான் 40 (32) ஓட்டங்களும், டாம் அபெல் 26 (20) ஓட்டங்களும் எடுத்தனர்.

 

SHARE