8 அவது முறையாக ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

93

 

2023 ஆம் ஆண்டிற்க்கான ஆசிய கிண்ணத் தொடர்பின் இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்களுக்கு சுருட்டி இந்தியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டி கோப்பையை வென்றுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டுயையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை ஈட்டியது.

இதன்மூலம் இந்திய 8ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

 

SHARE