8 கோல்கள் என மழையாக பொழிந்த பாயர்ன் முனிச்! ஹரி கேன் ஹாட்ரிக் கோல்..கதிகலங்கிய எதிரணி

115

 

பாயர்ன் முனிச் அணி பண்டஸ்லிகா தொடரில் 8-0 என்ற கோல் கணக்கில் டர்ம்ஸ்டட் அணியை பந்தாடியது.

பண்டஸ்லிகா தொடரின் நேற்றைய போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் டர்ம்ஸ்டட் அணிகள் மோதின. விறுவிறுப்பாக தொடங்கிய இந்தப் போட்டியின் 4வது நிமிடத்திலேயே பயர்னின் அனுபவ வீரர் கிம்மிக் ரெட் கார்டு பெற்றார்.

ஹரி கேன் முதல் கோல்
ஆனால் நட்சத்திர வீரர் ஹரி கேன் 51வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து முசியாலா 60வது நிமிடத்திலும், சனே 56வது நிமிடம், 64வது நிமிடம் என இரண்டு கோல்கள் அடித்தனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து டர்ம்ஸ்டட் மீள்வதற்குள் பாயர்னின் ஹரி கேன் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் தாமஸ் முல்லர் (71வது முல்லர்), முசியாலா (76வது நிமிடம்) அடுத்தடுத்து கோல்கள் போட்டனர்.

இமாலய வெற்றி
டர்ம்ஸ்டட் அணி வீரர்கள் கோல் போடுவதைவிட பயர்ன் அணியை கோல் போடவிடாமல் தடுக்கவே போராடினர். ஆனாலும் பாயர்ன் முனிச்சின் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஹரி கேன் தனது 3வது கோலை அடித்தார். இறுதியில் பாயர்ன் முனிச் அணி 8-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.

SHARE