86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும், நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி. அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.

383

 

டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..
 
ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின.
 
கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது
மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிஇருப்பதாகவும் சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர், ஜூலை 6, 2008இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையாளராகவிருந்த இவோன் ரிட்லி.
செய்திச் சேகரிப்பிற்க்காக சிறைச்சாலை சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து இச்செய்தியை வெளி உலகிற்குக் கொண்டுவந்தார்.
அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம் என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி. அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டெடுப்பதற்க்காக பாகிஸ்தான் விரைந்தார்.
இதேவேளை, முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனாமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார். தான் இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனாமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண், பல ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ‘ஜஸ்டிஸ் கட்சி’யின் தலைவரான இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.
அவர் பெற்ற வதைகள் மிகவும் பயங்கரமானதும் மனிதாபிமானம் உள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாதா அராஜகங்கள் அவர் பெற்ற வதைகளில் சில Dr.ஆபியா சிந்தீக்கியின் தாய் இப்படி கூறுகின்றார்
ஆறு பேர் வதை முகாமுக்கு வருவார்கள் அவர்கள் பலவந்தமா ஆபியாவை நிர்வாண படுத்தி பாலியல் வதை செய்வார்கள் அந்த நிலையில் இரத்தம் ஓடும்வரை துப்பாகிகளின் பின் புடியினால் மிக மோசமாக அறைவார்கள்
நிர்வாண படுத்தப்பட்ட ஆபியாவை கட்டில் ஒன்றில் கால்களையும் , கைகளையும் கட்டி கால்களிலும் , தலையிலும் வர்ணிக்க முடியாத சித்திர வதைகளை செய்வார்கள் அவரின் உடலில் அறியபடாத திரவங்களை ஊசியின் ஊடாக செலுத்துவார்கள் உடைகளை பலவந்தமாக நீக்கி வதை முகாமில் அவரின் தலை முடியில் பிடித்து இழுத்து வதைப்பார்கள்
எல்லா வற்றுக்கும் மேலாக அவரை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்
அவர் சிதைக்க பட்டார், அவரின் மானம் சிதைக்கப்பட்டது ,அவரின் குடும்பம் சிதைக்க பட்டது மூன்று குழந்தைகளுடன் கடத்த பட்ட ஆபியா வர்ணிக்க முடியாத வதைகளை அனுபவித்தார் , கணவனை இழந்தார் இவருடன் கடத்த பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் எங்கு இருகின்றார்கள் என்ற விபரம் இன்னும் எவருக்கும் தெரியாது அனைத்தையும் இழந்த ஆபியா வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள்,
ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்த சகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது.
சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.
அமெரிக்க புலனாய்வு ஏஜன்ட்டுகாளால் ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம் துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும் சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் -mass-casualty attacks-என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டு 86 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க அநீதி மன்றம்.
இந்த சகோதரி சிறை மரணித்து விட்டதாக செய்திகள் வந்தது,ஆனால் வேறு சில செய்தில் உயிருடன் இருபதாக வருகிறது. அல்லாஹ் அறிந்தாவன்
யா அல்லாஹ் இந்த சகோதரிக்கும் அவர் குழந்தைகளுக்கும் உன் கருணையை பரிபுரனமாக வழங்குவாயாக
உலகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு அக்கிரமகாரங்கலின் தீங்கை விட்டு முழுமையான பாதுகாவலை கொடுப்பாயாக மேலும் அக்கொடுமையார்களின் சூழ்ச்சியை முறியடிப்பாயாக
இந்த அக்கிரமகாரர்களுக்கு உன்புறத்தில் இருந்து தண்டனையை விரைந்து அனுப்புவாயாக
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான் அவர்களுக்கூரிய தண்டனை அல்லாஹவிடம் இருக்கிறது இன்னும் அதற்குரிய தண்டனை வெகு தூரத்தில் இல்லை.
SHARE