86 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

369
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 86 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நாளை இலங்கை வரவுள்ள நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட மீனவர்கள் அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதன்படி 67 காரைக்கால் மீனவர்களும், 19 நாகை மீனவர்களும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம் மீனவர்களே விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE