90களில் கலக்கிய நடிகை சிவரஞ்சனியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அவரது கணவரும் நடிகரா?

184

 

சமூக வலைதளங்களில் 90களில் கலக்கிய நடிகைகளின் குடும்ப போட்டோ, லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அப்படி இப்போது ஒரு நடிகையின் புகைப்படம் தான் வெளியாகி வருகிறது. 90களில் வசீகர கண்களால் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் சிவரஞ்சனி.

தமிழில் பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

திருமணம்
சினிமா நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அதாவது கடந்த 1999ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆந்திராவிலேயே செட்டில் ஆகியுள்ள சிவரஞ்சனிக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

SHARE