90களில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு

70

 

அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகி தான் சங்கவி.

அப்படத்தின் மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட சங்கவி அடுத்து கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என விஜய்யுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அழகிய ஜோடியின் போட்டோ
ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித் உட்பட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தனது 38வது வயதில் கடந்த 2016ம் ஆண்டு தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சொத்து மதிப்பு
2019க்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நடிகை சங்கவி அண்மையில் தனது 46வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார். அதிகபட்சமாக இவருக்கு ரூ. 10 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE