90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

254

 

ஜேர்மனி நாட்டில் 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மோரோக்கோ நாட்டை சேர்ந்த 19 வயதான வாலிபர் ஒருவர் ஸ்பெயின் நாட்டில் சில ஆண்டுகள் வசித்து வந்துள்ளார்.

ஸ்பெயினில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 2016-ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மது மற்றும் போதை மருந்தை எடுத்துக்கொண்ட அந்த வாலிபர் Dusseldorf நகரில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, 90 வயதான மூதாட்டி ஒருவர் தொழுகையை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது அவர் மீது வாலிபர் பாய்ந்துள்ளார்.

‘உன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் எடு’ எனக் கூறி மிரட்டியுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என மூதாட்டி அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியின் பதிலால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரது ஆடைகளை கிழித்தெரிந்து கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த சிலர் மூதாட்டியை அவசரமாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏவை பயன்படுத்தி பொலிசார் வாலிபரை கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, சுயநினைவின்றி இருந்த காரணத்தினால் இந்த தவறை செய்துவிட்டதாக வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மூதாட்டியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நீதிபதி வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

SHARE