900 பேரை பலிவாங்கிய கேப்டனுக்கு நேர்ந்த கதி (வீடியோ இணைப்பு)

321

 

 

மத்திய தரைக்கடலில் 900 பேரை பலிவாங்கிய கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிபியாவில் உள்நாட்டு போர் வலுத்து வருவதால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடி செல்லவும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறுகின்றனர்.

இவ்வாறு வெறியேறும் மக்கள் சட்டவிரோதமாக படகு அல்லது கப்பல் மூலமாக பயணித்து கீரிஸ், இத்தாலி போன்ற நாடுகளில் அகதிகளாய் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வார இறுதியில், அளவுக்கு அதிகமாக 1,000 அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நடுக்கடலில் மூழ்கியது. இதில், 900 பேர் இறந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து விசாரித்து வரும் இத்தாலிய பொலிசார், கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் கைதானவர்கள் மீது, சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்றது, அவர்களை படுகொலை செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE