92 வயது பாட்டியின் வயிற்றில் குழந்தை..! மருத்துவர்கள் வியப்பு

173

 

எகிப்தில் உள்ள மம்மிக்களைப் போல், 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது.

சிலி நாட்டைச் சேர்ந்த 92 வயது பாட்டி ஒருவர், வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது வழக்கம், சமீபத்தில் அவரது இடுப்பு பகுதியில் எக்ஸ்-ரே செய்து பார்த்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்று இருப்பது போல் தோன்றவே, பல பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அப்போதுதான் அவரது கருப்பைக்கு வெளியே கடந்த 50 வருடங்களாக பதப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் கரு இருப்பது தெரிய வந்தது. அது 7 மாதம் வளர்ந்த நிலையில் 2 கிலோ எடையுடன் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதைவிட வியப்பானது என்னவென்றால் இந்த விசித்திரமான கருவினால் பாட்டிக்கு இதுவரை எந்த வலியும் ஏற்படவில்லை என்பதுதான்.

கர்ப்பகாலத்தின் போது குழந்தை இறந்து, உடலில் உள்ள கால்சியங்கள் படிந்து, வயிற்றில் தங்கி விடுவதே இதற்குக் காரணம். இந்த அரிய சம்பவத்திற்கு மருத்துவ உலகில் ’லிதோபீடியன்’ என்று பெயர்.

ஆனால், மருத்துவர்களின் அதீத வியப்பினால் பயந்தோ என்னவோ பரிசோதனை முடிந்த சில மணி நேரங்களிலேயே அறுவை சிகிச்சை கூட செய்து கொள்ளாமல் அந்த பாட்டி வீட்டிற்கு சென்று விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Baby

SHARE