99 அடி உயரத்தில் கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜகோபுரம்

235

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

நேற்று காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார், நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் சுதாகரன், கரச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், உத்தியோகத்தர்கள், குருக்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் இடது கரையில் மேற்குப் புறமாகவும் இரணைமடு நீர்த்தேக்கத்தினையே தீர்த்தக் கேணியாகவும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் 99 அடி உயரமும் 52 அடி நீளமும் 36 அடி அகலத்தை கொண்டு நவ தளங்களுடன் கூடிய இராஜ கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவே இன்று நடைபெற்றது.

இந்த இராஜகோபுரத்தினை ஆறு கோடி செலவில் இரண்டு வருடங்களிற்குள் முடிக்க இருப்பதாகவும் இதற்கான பணத்தினை புலம்பெயர் உறவுகள் மற்றும் வடக்கு வாழ் மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தங்களிடம் நம்பிக்கை மட்டுமே இருப்பதாகவும் ஆலய பரிபாலன சபையினரும் ஆலய இராஜகோபுர திருப்பணிச் சபையினரும் தெரிவித்துள்ளனர்.

SHARE