பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இரசாயன விபத்தில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bournemouth பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலே இந்த இரசாயன விபத்து இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் விடுதியில் இரசாயன கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும், விடுதியில் இரசாயனத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். விடுதியிலிருந்த மாணவர்களையும் அதிரடியாக வெளியேற்றியுள்ளனர்.
தீயணைப்பு துறையினர் பாதுகாப்பான உடை அணிந்து அபாயகரமான இரசாயனம் அடங்கிய தொட்டியை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும், விடுதியை சுற்றி பொலிசார் கேடயம் அமைத்து யாரையும் நுழைய விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில், இரசாயன வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொலிசார் கூறியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லாததால் பொலிசார் மாணவியின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.