என்றும் 16 ஆக ஜொலிக்கனுமா? இதோ இயற்கை வைத்தியங்கள்!

178

குளிர்காலத்தில் முகம் வறண்டு விடுவது இயற்கைதான் . ஆனால் அதனை அப்படியே விட்டு விட்டால் எளிதில் சுருக்கங்கள் ஆரம்பித்துவிடும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையால்தான் இந்த பிரச்சனை.

நெகிழ்வுத்த்னமை குறையும்போது மடிப்பு போல் சுருக்கங்கள் வரத் தொடங்கும். முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் வயதாவதை கூட்டும். இளமையை விரைவில் போக்கச் செய்யும். இளமையான முகத்திற்கு இங்கு சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்களை உபயோகித்து பாருங்கள்.

டிப்ஸ் – 1

வெந்தயக்கீரை,

பாசிப்பருப்பு,

சீரகம்.

செய்முறை: வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். முகம் பளபளப்பாக மாறும்.

டிப்ஸ் -2

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

டிப்ஸ் -3

ஒரு ஸ்பூன் தேனுடன் கேரட் சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் வேகமாக மறைந்துவிடும்.

டிப்ஸ் -4

ஒரு வாழைப் பழத்தை மசித்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் சுருக்கங்கள் மறைவதோடு, முகமும் மென்மையாகும்.

டிப்ஸ் -5

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.

இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.

SHARE