500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசியான நொஸ்ராடாமுஸ் பிரபல ஆரூடம் கூறும் நபராக உலக புகழ்பெற்றுள்ளார்.
செம்டெம்பர் 11ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட ஆரூடம் உட்பட மேலும் பல சிறப்பான ஆரூடங்களை 500 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டதன் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
அதற்கமைய இரண்டாம் உலக யுத்தம் மற்றும் ஹிட்லரின் வருகை, 2017ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நியமிக்கப்படுவார், என்பவைகளும் அவற்றில் உள்ளடக்கப்படும்.
அதற்கமைய அவரது 2017ஆம் ஆண்டு ஆரூடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அது தற்போதுவரையில் உண்மையாகி உள்ளதாக அதனை ஆய்வு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
2017ஆம் ஆண்டில் சீனா பொருளாதாரத்தில் சிறந்த நாடாக மாற்றமடையும் எனவும் உலக பொருளாதார நெருக்கடியை சமப்படுத்துவதற்கு சீனா தலையிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் இத்தாலி பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும். அத்துடன் ஐரோப்பா பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும். அதன் முடிவாக இத்தாலி பிரதமர் பதவியில் இருந்து செல்ல நேரிடும்.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக அமெரிக்கா சிறப்பு தன்மையில் இருந்து கீழ் இறங்க நேரிடும்.
வருடத்தின் நடுப்பகுதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இணைந்து செயற்படும். அமெரிக்கா ஆட்சி அதற்கு எதிராகும். எனினும் ஐரோப்பா இதற்காக ஆதரவு வழங்கும் நிலையில், அந்த நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும்.
காலநிலை ஏற்படும் மாற்றம் காரணம், அதன் தாக்கத்தை உலகம் முகம் கொடுக்க நேரிடும். இதனால் உலகின் பலர் உயிரிழக்க நேரிடும். இந்த ஆண்டில் தீவிரவாதிகளின் செயற்பாடு அதிகரித்து காணப்படும்.
அத்துடன் உலகம் முழுவதும் கணனி புரட்சி ஒன்று ஏற்படும். அதற்கமைய தற்போதைய கணனி முறை மாற்றமடைந்து புதிய கணனி முறை ஒன்று உலகிற்கு அறிமுகமாகும்.
அதேபோல் இந்த ஆண்டு உலகம் முழுவதும் சூரிய சக்தியின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கும். விண்வெளி விமான பயணம் சாதாரண விமான பயணங்கள் போன்று மாற்றமடையும்.
மேலும் தென்கொரிய ஜனாதிபதி அதிகாரத்தில் இருந்து இந்த வரும் நீக்கப்படுவார் என நொஸ்ராடாமுஸ் 500 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.