ஒரே மாதத்தில் ஸ்லிம்மாகணுமா? இதுல ஒரு டம்ளர் போதுமே!

174

ஒருவரின் உடல் எடை அதிகமாவதற்கு, மோசமான டயட் மற்றும் உடற்பயிற்சியின்மை மட்டுமின்றி, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகள் கூட காரணமாக இருக்கலாம்.

எனவே அதிக உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு, ஒருசில ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த இயற்கையான பானங்கள் உதவுகிறது.

அந்த வகையில் பயன்படுவது தான் வாழைப்பழம் மற்றும் ஆளி விதைகள்.

இதில் பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால், நமது உடலின் மெட்டாலிபாசத்தை அதிகரித்து, கெட்டக் கொழுப்புகளை கரைக்கிறது.

தேவையான பொருட்கள்
  • வாழைப்பழம் – 1
  • ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்
  • சோயா பால் – 1/2 கப்
தயாரிக்கும் முறை

1 வாழைப்பழம், 1/2 கப் சோயா பால், 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்தால், ஆரோக்கியமான, வேகமாக உடல் எடையை குறைக்கும் வாழைப்பழ பானம் ரெடி.

குடிக்கும் முறை

வாழைப்பழ பானத்தை ஒரு மாதம் தொடர்ந்து, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும்.

குறிப்பு

சோயா பால் அலர்ஜி என்றால், கொழுப்பு குறைவான பாலைப் பயன்படுத்தி இந்த பானத்தைத் தயாரிக்கலாம்.

தினமும் இந்த வாழைப்பழ பானத்தை குடித்து வருவதுடன் 40 நிமிடங்கள் உடற்பயிற்சியை செய்தால், விரைவில் அதற்கான நல்ல பலனைக் காணலாம்.

SHARE