மின்ஸ்க், பெலாரஸ் பகுதியை சேர்ந்தவர் ஒக்சனா நெவெசலயா. சிலநாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியான ஒரு சிறிய காணொளி பதிவின் மூலம் இப்போது உலகின் ஹாட்டான கணக்கு டீச்சர் என்ற அடைமொழி பெற்றுள்ளார்.
செய்திகள் இன்டர்நெட்டில் வெளியான காலம் பொய், இன்டர்நெட்டை சாதாரணமாக நடப்பவை செய்தியாகும் காலம் வந்துவிட்டது. முன்பு போல் இல்லாமல் இப்போது சாதானையாளர்கள், பிரபலங்கள் என்ற அடைமொழி சாதாரண மக்களுக்கும் கிடைத்துவிடுகிறது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் எப்படியாவது இன்டர்நெட்டில் ஒருவாரம் சென்சேஷனலாக இருந்துவிட வேண்டும். அவ்வளவு தான், பிறகு நீங்கள் பிரபலமாகும் வேலையை நெட்டிசன்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தற்போது உலகின் ஹாட்டன கணக்கு டீச்சர் என்ற அடைமொழியோடு ஒருவர் லேட்டஸ்ட் இன்டர்நெட் சென்சேஷனலாக உலா வந்துக் கொண்டிருக்கிறார்…

ஒக்சனா நெவெசலயா!
ஒக்சனா நெவெசலயா மின்ஸ்க், பெலாரஸ் பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னை தானே ஒரு சென்சுவல் கணக்கு டீச்சர் என கூறிக் கொள்கிறார். இப்போதைக்கு இவர் ஒரு கணக்கு டீச்சர் என்பதற்கான ஒரே ஆதாரம் இவர் வெளியிட்ட ஒரு சிறிய வீடியோ தான்.

மாடல் அழகி!
பார்க்க மாடல் அழகி போல இருக்கும் இவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவு செய்து ஆண் ரசிகர்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருக்கிறார்.

ரசிகர்கள்!
இவரிடம் பயிலும் மாணவர்களை விட, இவரை பின்தொடரும் ஆண் ரசிகர்கள் தான் ஆதிகம். ஏறத்தாழ 1.75 லட்சத்திற்கும் மேலானவர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.

சமூக தளத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன்!
கடந்த ஒரு வாரத்தில் இவரது ரசிகர் பட்டாளம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவரது முகநூல் பக்கத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 3000% அதிக லைக்ஸ் மற்றும் ஆக்டிவிட்டி அதிகரித்துள்ளது.

மலேசியா!
தற்போது இன்டர்நெட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஒக்சனா நெவெசலயா மலேசியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதை இவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள படங்களை வைத்து அறியப்படுகிறது.

பிகினி படங்கள்!
இவர் வெளியிட்ட பிகினி படங்கள் இவர் மெய்யாலுமே கணக்கு டீச்சர் தான, அல்ல இன்டர்நெட் புகழுக்காக இப்படி கூறுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது. கொள்ளை அழகு நிரம்பி இருக்கிறார் எனிலும், ஆசிரியர் துறையில் பணியாற்றும் ஒரு நபர் இப்படி நடந்துக் கொள்வது வியப்பையும், குழப்பத்தையும் அளிக்கிறது.
வகுப்பறை வீடியோ!
இவர் வகுப்பறையில் பாடம் எடுப்பது போன்ற இந்த வீடியோ வெளியான பிறகு தான் இவர் இன்டர்நெட்டில் பிரபலமானார்…