தல அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் ஒருபக்கம் பிஸியாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் இன்டர்நேஷ்னல் லெவலில் இருக்கும் என அனிருத் ஏற்கெனவே கூறியிருந்தார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடியிருக்கும் பிரபல ஹிப்ஹாப் பாடகர் யோகி பி சமீபத்தில் நடந்த ஒரு விழா ஒன்றில் பாடல்களை பற்றி பேசியுள்ளார்.
அதோடு அனிருத் ஒரு ரியல் EDM இசைக்கலைஞர் என்றும் அவருடன் பணிபுரிந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சி என்று கூறியதோடு, ஒரு பாடலின் ஹம்மிங்கையும் பாடி காட்டியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.