உங்கள் வாழ்வில் அதிஷ்டம் நிலைத்திட இந்த வழிமுறைகளை முயற்சியுங்கள்….!

236

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை இருக்கும். இவற்றில் சில பிரச்சனைகளுக்கு நம்மால் எளிதில் தீர்வுகளைக் காண முடியும். ஆனால் நம்மால் தீர்வு காணவே முடியாத அளவில் சில பிரச்சனைகள் இருக்கும். இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நம் சாஸ்திரங்களும், புராணங்களும் தீர்வளிக்கும்.

கோபத்தைக் குறைக்க…

கோபம் மிகவும் ஆபத்தானது. இந்த கோபத்தைக் குறைக்க இரவில் படுக்கும் போது கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு ஓரத்தில் காப்பர் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக்கட்டையை வைத்து தூங்குவதன் மூலமும் கோபம் தணியும்.

தைரியம் அதிகரிக்க…

உங்களுக்கு எந்த ஒரு செயலையும் செய்ய தைரியம் இல்லையா? அப்படியெனில் தலையணைக்கு அடியில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வைத்து தூங்குங்கள். வேண்டுமானால், வெண்கல பாத்திரத்தில் நீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்தும் தூங்கலாம்.

அதிர்ஷ்டம் தேடி வர…

இதுவரை உங்களுக்கு எதிலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால், வெள்ளியால் ஆன மீனை தலையணைக்கு அடியில் வைத்தோ அல்லது நீர் நிரப்பிய வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தோ தூங்குங்கள்.

கண் திருஷ்டியில் இருந்து விடுபட…

21 நாட்கள் இரவில் படுக்கும் போது இரும்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு அருகில் வைத்து தூங்குங்கள். அதோடு, நீல நிற கல்லை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். இதனால் கண் திருஷ்டி விலகும்.

 

SHARE