பிரபல நடிகர் தன்னை தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை! அதிர்ச்சி காரணம்

208

பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி பெயிலில் வந்த ஹாலிவுட் நடிகர் Frederick Jay Bowdy அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க திரைப்படங்களிலும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் Frederick Jay Bowdy (33) திருமணமான இவருக்கு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசாரால் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் $100,000 பணம் கட்டிய Frederick பெயிலில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்தே மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்த Frederick தன் வாழ்க்கையை முடித்து கொள்ள தீர்மானித்தார்.

மேலும், பலர் தான் தற்கொலை செய்வதை பார்க்க வேண்டும் என விரும்பிய இவர், இதை தன் பேஸ்புக் Live மூலம் ஒளிபரப்ப தீர்மானித்தார்.

அதன்படி, Frederick தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன் தலையில் சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.

இந்த காட்சியை பேஸ்புக் Live – யில் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பேஸ்புக் பயன்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், Frederick திடீரென துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.

அந்த துப்பாக்கி குண்டு சத்தம் இன்னும் என் காதிலேயே ஒலித்து கொண்டிருக்கிறது என அதிர்ச்சி விலகாமல் தெரிவித்துள்ளார்.

Frederick சடலத்தை கைப்பற்றியுள்ள பொலிசார் தற்போது இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE