நடிகர் லாரன்ஸ் அணி மெரீனாவை குழப்ப உள்துறை செயலாளரை சந்தித்த ரகசியம் அம்பலமானது

188

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவரக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் லட்சக்கணக்கானோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சென்னை மெரீனா அறப்போராட்டத்தில் ஈடுபட கூட்டம் கூட்டமாக குவியத்தொடங்கி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் அமைந்தது.

தொடர்ந்து 6 நாட்களாக நன்றாக சென்றுகொண்டிருந்த போராட்டம், சில விஷமிகளின் தலையீட்டால் சென்னை இளைஞர்களை துவம்சம் செய்ய வைத்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் லாரன்ஸ், காங்கேயம் காளைகள் ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஜல்லிக்கட்டுக்கு சட்டப்போராட்டம் நடத்திவரும் ராஜசேகர் மற்றும் ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் டில்லிக்கு சென்று, உள்துறை செயலரை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர்களிடம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் மதவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லி சென்ற விசயத்தை வெளிப்படையாக கூறினால் தங்களுக்கு எதிர்ப்பு ஏற்படும் என கருதி அவர்கள் விலகி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால், பொத்தாம் பொதுவாக, மாணவர்களுடன், சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு போராட்டத்திலிருந்து விலகியுள்ளனராம்.

ஆனால், இதனை நம்ப மறுத்த அப்பாவி மாணவர்களும் இளைஞர்களும் தடியடியில் சிக்கி காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் லாரன்ஸ் வைத்திய சாலை சென்றது பொய் மாறாக அந்த காலப்பகுதியில் டெல்லி சென்று வந்தமை நாட்கள் கடந்து அம்பலமாகியுள்ளது.

நடிகர் லாரன்ஸ் பணம் கொடுத்தார் எவ்வளவு செய்தார் என வாயைப் பிளக்கும் தமிழர்களுக்கு இது தெரியுமா…

தமிழர்களின் சாபக் கேடு ஒருத்தன் எதைச் செய்தாலும் உள் அர்த்தம் புரியாமல் வாயைப் பிளப்பது தமிழா அனைத்தையும் இழந்து விட்டாய் உம்மிடம் இருப்பது உனக்கே தெரியும் இலட்சிளத்தை மாற்றாதே….

SHARE