நயன்தாரா நடிப்பில் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. விரைவில் மாயா படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்துள்ள திகில் படமான டோரா வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவிட்டது. தற்போது அனிருத் பாடியுள்ள ரா ரா ரா என்ற பாடல் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அனிருத் பாடிய இந்த பாடலில் நயன்தாரா சொந்தக்குரலில் பேசிய வசனங்களும் உள்ளது. எனவே முதன்முதலாக அனிருத், நயன்தாரா இணைந்து குரல் கொடுத்துள்ள இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.