கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி நாளை செவ்வாய்கிழமை மாலை 6மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தீபம் ஏற்றி நீதி கோரும் போராட்டம் நடைபெற உள்ளது.
சுதந்திர ஊடக அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உட்பட ஊடக அமைப்புக்கள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரிபால சிறிசேனா அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.