வவுனியாவில் சாகும்வரையிலான உண்னாவிரதப்போரட்டம் கைவிடப்பட்டது மீண்டும் மண்குதிரைகளை நம்பிய போராட்டகாரர்கள்

261

 

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலி கமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வவுனியாவிற்கு நேரில் வியஜம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டு ள்ளது.

இந்த உறுதி மொழியின் பிரகாரம் எதிர்வரும் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் கலந்துரை யாடவுள்ளனர்.



SHARE