என் இதயமே நொறுங்கியது- சோகத்தில் தனுஷ்

240

ட்விட்டரில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரும், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடாலும் மோதினர்.

விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி நடாலை வீழத்தி ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனாக முடிசூடினர்.

நடிகர் தனுஷ் ரபேல் நாடலின் தீவிர ரசிகர், இந்த போட்டியில் அவர் தோல்வியை தழுவியது என் இதயமே நொறுங்கியது என்று ட்வீட் செய்துள்ளார், அதே சமயம் ரோஜருக்கும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

Heart breaking as a nadal fan. But happy to have witnessed one more fedal finals. Well played king roger. #18 and counting. Love you RAFA

SHARE