சந்தானம் காமெடியன் என்ற பெயரிலிருந்து ஹீரோ அந்தஸ்திற்கு வளர்ந்துவிட்டார். இவர் தற்போது மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கனும், சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சந்தானம் இன்று இந்த நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜேஸ் படங்களும் ஒரு காரணம், ராஜேஸும் நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வருகிறார்.
தற்போது இவர் கூறிய கதை ஒன்று சந்தானத்திற்கு பிடிக்க, விரைவில் சந்தானம்-ராஜேஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளது.
இதுநாள் வரை ராஜேஸ் படத்தில் காமெடியனாக நடித்து வந்த சந்தானம் முதன் முதலாக ஹீரோவாக நடிக்கவுள்ளார்.