யூரிக் அமிலம் ப்யூரின் என்ற கார பொருள்( base) உடைவதால் அதிகம் உண்டாகிறது. இந்த யூரிக் அமிலம் உப்பாக மூட்டு இணைப்புகளில் தேங்கி கௌட் (Gout)என்னும் வாத நோய் உண்டாகும். இதற்கு மரபணுவும் ஒரு காரணமாகும். இந்த நோய் வந்தால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி ஏற்படும். மூட்டை மடக்கவும் நீட்டவும் முடியாமல் விறைப்பு உண்டாகும்.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடியுங்கள். இவை அதிகப்படியான யூரிக் அமிலத்தை சிறு நீரகம் வழியாக அகற்றி விடும்.
பெர்ரி வகைகள்: மூட்டு வாத நோய் இருப்பவர்கள் பெர்ரி பழங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த காய்கறிகள் சாப்பிட்டால் யூரிக் அமிலம் சேராது என மேரிலேண்ட் பல்கலைக் கழகம் ஆய்வின் மூலம் நிருபித்துள்ளது.
செலரி விதைகள்: செலரி விதைகள் டையூரிடிக் பண்புகளை அதிகம் கொண்டவை. இவை சிறு நீரகத்தை தூண்டி அதிக யூரிக் அமிலத்தை வெளியேற்றச் செய்யும். இதனால் யூரிக் அமிலம் மறு சுழற்சிக்கு ஈடுபடுத்த முடியாது.
எலுமிச்சை ஜூஸ் : எலுமிச்சை ஜூஸை தினமும் காலை மாலை என குடித்து வந்தால், எலுமிச்சையில் உள்ள அமிலப் பண்பு, யூரிக் உப்பை கரைத்து விடும். இதனால் எலும்புகளின் இணைப்புகளில் யூரிக் அமிலம் தங்காது.
நார்சத்து உணவுகள் : நார்சத்து உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து உணவுகள் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகப்படியான யூரிக் அமிலம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
– See more at: http://www.manithan.com/news/20170131124689#sthash.zl0X0SIS.dpuf