பிறந்தவுடனேயே குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்?

176

குழந்தைகள் பிறந்தவுடனேயே அழ வேண்டும், அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஒருசில வேளைகளில் குழந்தைகள் அழாமல் இருந்தால், மருத்துவர்கள் குழந்தையை அழவைக்க முயற்சி செய்வார்கள்.

இதற்கு பல காரணங்கள் உண்டு, குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருக்கலாம்.

இதுதவிர குழந்தைகள் வெளிவரும்போது, இயல்பை விட முன்னதாகவே நஞ்சுப்பை பிரிந்துவிடும்.

இதுபோன்ற நேரங்களில் குழந்தைக்கு சரியான அளவில் ரத்தம் கிடைக்காமல் இருக்கலாம்.

மேலும் குழந்தையின் தாய்க்கு அதிக அளவில் ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, வெள்ளைப்படுதல் மற்றும் நீரிழிவு நோய் பிரச்சனைகள் அல்லது குழந்தையின் இதயம் மற்றும் மூளையில் இருக்கும் பாதிப்புகள் காரணமாகவும் குழந்தைகள் அழாமல் இருக்கும்.

SHARE