எதிர்காலத்தில் மகனுடன் மோதல் வந்தால் சந்தோஷம் தானே- ஜெயம் ரவி ஓபன் டாக்

259

ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு தன் மார்கெட் புரிந்து ஒவ்வொரு படமாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். இவர் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வரவிருக்கும் படம் போகன்.

இப்படம் தமிழகம் முழுவதும் 350 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது, இதுக்குறித்து பல பத்திரிக்கைகளுக்கு ரவி பேட்டியளித்து வருகின்றார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் உங்கள் மகனும் டிக் டிக் டிக் படத்தில் நடிக்கவுள்ளார், இன்னும் 15 வருடம் கழித்து மம்முட்டி-துல்கர் போல் உங்களுக்குள் ஒரு போட்டி வருமா? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘ஏன் அப்படி ஒரு போட்டி வந்தால் சந்தோஷம் தானே, நன்றாக தானே இருக்கும்’ என பதில் அளித்துள்ளார்.

SHARE