தாங்க முடியாத இருமலா? அதை குணப்படுத்த ஒருவாரம் போதுமே

194

இருமல் பிரச்சனை இருந்தாலே நாம் எந்த ஒரு செயலிலும் சரியாக ஈடுபட முடியாமல் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும்.

ஆனால் இதுபோன்ற தாங்க முடியாத இருமல் பிரச்சனையை மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாததை ஒரு அற்புதமான இயற்கை வழியின் மூலம் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்
  • முட்டைக்கோஸ் – 1
  • தேன் – சிறிதளவு
செய்முறை

முதலில் முட்டைக்கோஸின் இலைகளை தனியாகப் பிரித்து, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும்.

பின் முட்டைக்கோஸின் இலைகள் சற்று வெதுவெதுப்பாக, மென்மையாகும் போது, முட்டைக்கோஸ் இலையின் ஒரு புறத்தில் மட்டும் தேனைத் தடவி, மார்புப் பகுதியில் வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்த பின் ஒரு நைலான் துணியைக் கொண்டு மார்பு பகுதியைச் சுற்றிக் கொள்ள வேண்டும். இதை செய்யும் போது, இரவில் தூங்குவதற்கு முன்பு செய்ய வேண்டும்.

இருமல் பிரச்சனையானது மிகவும் கடுமையாக இருந்தால், நமது மார்பு பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸையும், முதுகுப் பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸ் இலையையும் விரித்து, கட்டிக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலையில் முட்டைக்கோஸ் இலையின் விரிப்பை எடுக்கும் போது, ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது அப்பகுதியை நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு

நமக்கு மூச்சுக்குழாய் அழற்சி சற்று முற்றிய நிலையில் இருந்தால், இந்த சிகிச்சையை தொடர்ந்து 5-7 நாட்கள் இரவில் பின்பற்ற வேண்டும். இதனால் நாள்பட்ட இருமல் பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும்.

SHARE