இதுவரை 10,000 அறுவை சிகிச்சைகள்: மருத்துவதுறையில் ஒரு சாதனை

224

ரஷ்யாவில் 89 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இதுவரை 10,000 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதன் மூலம் உலகிலேயே பழமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்று பெயரெடுத்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள Ryazan என்ற மருத்துவமனையில் பணியாற்றி வரும் Alla Ilyinichna Levushkina – யின் வயது 86 ஆகும்.

இவர், தனது 30 வயதில் விமான மருத்துவ சேவையின் மூலம் தனது பணியை தொடங்கினார்.

மருத்துவ துறை என்பது ஒரு தொழில் அல்ல, அது நமது வாழ்க்கை எனக்கூறும் இவர், தனக்கு பணி ஓய்வு என்பதே கிடையாது என கூறுகிறார்.

89 வயதை கடந்துவிட்டாலும், அறுவை சிகிச்சை அறைக்குள் தெளிவான ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை கருவிகளையும் மிகச்சரியான முறையில் கையாண்டு வருகிறார்.

இவர் உயரம் குறைவான நபர் என்பதால், நோயாளிகள் இவருடன் எளிதில் நெருங்கி பழக எளிதாக உள்ளது.

89 வயதை கடந்துவிட்டபோதிலும் ஒரு நாளைக்கு 4 அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறார். வருகின்ற மே மாதத்துடன் இவருக்கு 90 வயதாகிறது.

நான் பணி ஓய்வு பெற்றுவிட்டால், அறுவை சிகிச்சைகளை யார் மேற்கொள்வார்கள்? என்று கேட்கும் இவர், எனது உயிர் உள்ளவரை இப்பணியை தொடர்ந்துகொண்டுதான் இருப்பேன் என கூறுகிறார்.

SHARE