அன்றாடம் நமது உணவில் தினமும் ஒரு கீரை வகையை சேர்த்து சாப்பிட்டு வந்தாலே நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
குறிப்பாக அந்த வகையில், பசலைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதனுடைய ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
பசலைக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
பசலைக் கீரையின் மருத்துவ நன்மைகள்
- பசலைக் கீரையின் முற்றிய தண்டுகள் மற்றும் இலைகள் நடுவில் இருக்கும் தடித்துள்ள பாகங்கள் இவை அனைத்தையும் விட்டு கீரையை மட்டும் சமைத்து சாப்பிட வேண்டும்.
- பசலைக் கீரையானது, நமது உடம்பில் இருக்கும் கெட்டக் கொழுப்பை கரைக்கும் தன்மையை கொண்டுள்ளது. எனவே தினமும் பசலைக் கீரையை சாப்பிட்டால் மிகவும் நல்லது.
- நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகமாக தூண்டச் செய்கிறது.
- குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க பசலைக் கீரையின் இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கட்டி, வீக்கம் ஆகியவற்றின் மீது போட வேண்டும்.
- தாங்க முடியாத தலைவலிகள் ஏற்படும் போது, பசலைக் கிரையின் இலையை நன்றாக அரைத்து நெற்றியில் பற்று போல போட வேண்டும். இதனால் நமது உடலின் வெப்பநிலை மற்றும் தலைவலி குணமடையும்.
- நமது உடம்பின் மூட்டுகளில் வலி அல்லது காலில் வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்வதற்கு, பசலைக்கீரையை அதிகமாக சாப்பிட வேண்டும்.
- தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் சருமப் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
- பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கம் ஏற்படாமல், அந்த புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.