முன்னிலை சேஷலிசக் கட்சியின் இணைப்புச் செயலாளர் குமார் குமார் குணரட்னத்திற்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குமார் குணரட்னம் இம் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்னம் உரிய முறையில் விண்ணப்பித்துருந்தால் குடியுரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யமுடியும் என அண்மையில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்த நிலையில் அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது,
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.