குவைத் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! விளையாட்டு உடையில் வந்தவரின் அட்டகாசம்

232

குவைத்தில் பணி புரியும் இலங்கை பணிப் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து கொண்டிருந்த போதே குறித்த பெண் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

”கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது, விளையாட்டு ஆடையில் இருந்த நபர் ஒருவரே என்னை தாக்கினார்” என குறித்த பெண் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் உதவி கேட்டு கத்திய போது குறித்த நபர் ஓடிவிட்டார் ன்றும் அந்த இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான விபரங்களை அந்த இலங்கைப் பணிப்பெண் வழங்கியதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது என பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE