வவுனியா மசாஜ் நிலையத்திற்கு எதிராக நகரசபை செயலாளர் அதிரடி நடவடிக்கை

275

 

வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று 04.02.2017 காலை 10மணியளவில் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்

இதனையடுத்து வவுனியா நகரசபை செயலாளர் திரு. ஆர். தயாபரன் உடனடியாக குறித்த மசாஜ் நிலையம் இயங்கிய கட்டிடத்திற்கு விரைந்து கட்டிடத்திற்கு எச்சரிக்கை கடிதம் ஒட்டியுள்ளார்

இவ் கட்டிடத்தில் நாடாத்தி செல்லப்படும் மசாஜ் நிலையத்தினை உடனடியாக பூட்டுவதுடன் உரிய அனுமதி பெற்றிருப்பின் 06.02.2017ம் திகதி காலை 9.00மணிக்கு நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டப்படுகின்றது. தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக 1987ம் ஆண்டு நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255க்கு அமைவாக தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்குத்தொடரப்படும் என கட்டிடத்தின் முன்னால் நகரசபை செயலாளரால் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.
SHARE