முடிந்தால் என்னை பிடி: வில்லியம், ஹரிக்கு சவால் விட்டு ஓடிய இளவரசி

239

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இளரவரசி கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹரிக்கு இணையாக ஓடிய சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனில் Queen Elizabeth ஒலிம்பிக் மைதானம் உள்ளது. இங்கு மாரத்தான் மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அங்கு பயிற்சி பெற்று வருகின்றன.

அவர்களுக்கு பயிற்சியாளர்கள் போட்டியை எப்படி எதிர்கொள்வது மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பாக பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி நாட்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொள்வர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கு இன்று பிற்பகலில் பிரித்தானிய இளவரசர் குடும்பம் கேட் மிடில்டன், வில்லியம்ஸ் மற்றும் ஹரி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த வீரர்களுக்கு மத்தியில் இவர்களுக்கிடையே சுமார் 100 மீற்றர் அளவிற்கு ஓட்டப்பந்தயப் போட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் முதலில் வேகமாக ஓடிய கேட் அதன் பின்னர் வில்லியம்ஸ் மற்றும் ஹரியின் வேகத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டார். இதில் ஆரம்பத்தில் வேகத்தை காட்டிய கேட் முடிந்தால் என்னைப் பிடி என்பது போல் ஓட்டம் பிடித்தார்.

இருப்பினும் கேட் கடைசி இடத்தையே பிடித்தார். இரண்டாவது இடத்தை வில்லியம்சும், முதல் இடத்தை ஹரியும் பிடித்தார். இதைக் கண்ட அங்கிருந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரம் செய்து ரசித்துள்ளனர்.

SHARE