விஷால் நடிகர் சங்க பொறுப்பிலிருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் களம் காணவுள்ளார்.
இதேநேரம் தன்னுடைய படப்பிடிப்பிற்கும் சரியான நேரம் ஒதுக்கி காலில் சக்கரம் கட்டி வேலை பார்த்து வருகிறார்.
தற்போது வந்த தகவலின்படி விஷால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு இரும்புத்திரை என பெயரிட்டுள்ளனர், இப்படத்தில் முதலில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக இருந்தது.
ஆனால், தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.