இளைய தளபதி விஜய்- ஜோதிகா நடிப்பில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது தான் நடிக்க வந்துள்ளார்.
இதில் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவும் இவர் சம்மதித்து இருந்தார்.
இதனால், ரசிகர்கள் உற்சாகமாகினார்கள், மேலும், முழுக்கதையையும் கேட்டு, தன்னுடைய கதாபாத்திரத்தின் உடைகள் வடிவமைப்பக்கு ஒத்துழைத்தல் உள்ளிட்ட அனைத்தையும் 2 மாதங்களில் முடித்துவிட்டார் ஜோதிகா.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய முந்தைய நாள் தான் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த படக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது, தற்போது ஜோதிகாவிற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.