ஆப்கானிஸ்தானில் பூமியில் புதைந்த 2 கிராமங்கள்

225

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கி 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. பனிச்சரிவால் நூற்றுக்கணக்கான வீடுகள் பூமியில் புதைந்துள்ளன.

பார்க்மட்டல் என்ற மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் அங்கு உள்ள 2 கிராமங்கள் முற்றிலுமாக பூமியில் புதைந்தன. ஹாப்சி என்ற கிராமத்தில் பனிச்சரிவில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர்.

இதை தவிர தலைநகர் காபூல், பதாக்ஷான் மாகாணம், சாரிபால் மாகாணம், பாத்க்கிஸ் மாகாணம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர்

இங்கு தொடர்ந்து பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிகின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. ரோடுகளும் அடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். எனவே, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

SHARE