கடைகளில் விற்கும் கண்ட கண்ட குளிர்பானங்களை அருந்துவதற்கு பதிலாக நாமே வீட்டில் தயார் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- எள் விதைகள் – 1 கப்
- தண்ணீர் – 3 கப்
செய்முறை
எள் விதைகளை நீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். ஏனெனில் இதில் விட்டமின் B1, B2, B3, B5, B6 மற்றும் C போன்ற அனைத்து சத்துக்களும் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.
நன்மைகள்
- கடுமையான தலைவலியை குறைக்க செய்கிறது.
- உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
- கல்லீரல், கணையம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
குறிப்பு
இந்த எள்ளு ஊற வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மேலும், எள் ஊறவைத்த நீரை நன்றாக கரைத்து மட்டுமே குடிக்க வேண்டும்.